இந்தியன் -2 படத்தில் கமலுக்கு ஜோடி திரிஷா?!

இந்தியன் -2 படத்தில் கமலுக்கு ஜோடி திரிஷா?!

Published on

தமிழ் சினிமாவின் பிரமாண்ட ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டொர் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகளைக் குவித்தது 'இந்தியன்' திரைப்படம்!

இந்த படத்தின் தொடர்ச்சியாக 'இந்தியன் 2' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து பல சிக்கல்கள் ஏற்பட்டு சரி செய்யப்பட்டு, முழுமூச்சாக படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அனால் காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு கதாநாயகியை தேர்வு செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்திருந்தார். அவரின் காட்சிகளும் முழுமையடையாததால் அந்த கதாபாத்திரத்திற்கு வேறொருவரை மாற்றும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு மாற்றாக நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க இந்தியன்-2 படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தெரிவிக்கிறது. ஏற்கனவே நடிகை த்ரிஷா மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com