இந்திய தபால் அலுவலக வேலைவாய்ப்பு 2023!

இந்திய தபால் அலுவலக வேலைவாய்ப்பு 2023!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இந்திய தபால் அலுவலக வேலைவாய்ப்பு 2023-24. 40,889 கிராமின் டாக் சேவக்ஸ் (ஜிடிஎஸ்)/ கிளை போஸ்ட் மாஸ்டர்/ உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை மற்றும் தேர்வு இடத்தை தேர்வு செய்யலாம்.

காலியிடங்கள் : 40,889.

காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

கிராமின் டக் சேவக் (GDS) / உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevak (GDS)/ Assistant Branch Postmaster) - 40,889.

சம்பளம்/ஊதியம் மற்றும் தர ஊதியம் :

கிராமின் டக் சேவக் (GDS)/ உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevak (GDS)/ Assistant Branch Postmaster) - ரூ. 12,000 - 29,380

வயது வரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10வது தேர்ச்சி (மெட்ரிகுலேஷன்) அல்லது அதற்கு சமமான / தொடர்புடைய / உயர் தகுதியை முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி மெட்ரிகுலேஷன் ஆகும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

10வது/ மெட்ரிகுலேஷன் மதிப்பெண்கள் தகுதி பட்டியல்(10th/ matriculation marks merit list) மற்றும் ஆவண சரிபார்ப்பின் (document verification) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த வேலைக்கு தேர்வு இருக்காது.

எப்படி விண்ணப்பிப்பது:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website: https://indiapostgdsonline.gov.in/

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16-02-2023

பணி அனுபவம்: இந்தப் பதவிக்கு மேலும் பணி அனுபவம் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஈடபிள்யூஎஸ்/ஓபிசி பிரிவினருக்கு (General/OBC/ EWS category candidates) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100

எஸ்சி/எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு (SC/ST/ PWD category and women candidates) விண்ணப்பக் கட்டணமில்லை.

உயர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இந்திய அஞ்சலகத்தின் வழக்கமான ஊழியர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com