இந்தியாவில் 9-வது புதிய தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் 9-வது புதிய தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியாக ஒரே ஒரு தவணை மட்டுமே செலுத்திக் கொள்ள கூடிய ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் மன்சுக் மாண்டவியா தெரிவித்ததாவது:

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே கோவிஷீல்டு,கோவாக்சின்,ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இப்போது ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக் கூடிய ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) வழங்கியுள்ளது.இது நாட்டில் 9-வது கொரோனா தடுப்பூசி ஆகும்.இது தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும்.

-இவ்வாறு அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கேமலேயா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 29 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com