இந்தியாவில் விரைவில் புதிய டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இந்தியாவில் விரைவில் புதிய டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த 2022- 2023-ம் நிதியாண்டில் புதிதாக சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இந்த டிஜிட்டல் கரன்சி வர்த்தகத்துக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கி, விரைவில் வெளியிடப்படும்.

-இவ்வாறு மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com