இந்திய கிரிக்கெட் அணியில் ரொட்டேஷன் பாலிசி: பிசிசிஐ அமல்படுத்த திட்டம்!

இந்திய கிரிக்கெட் அணியில் ரொட்டேஷன் பாலிசி: பிசிசிஐ அமல்படுத்த திட்டம்!

இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக ரொட்டேஷன் பாலிசி முறையை இந்திய கிரிகெட் வாரியமான பிசிசிஐ கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டதாவது:

நியூசிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப் பட்டனர். இந்நிலையில் நியூசிலாந்துடன் நடந்த் 3 டி=20 போட்டிகளிலும் இந்தியா வெற்றியைத் தட்டிச் சென்றது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டனான கோலி பங்கேற்காமலே இந்திய அணி நியூசிலாந்து டி 20 தொடரை வென்றுள்ளது.

இதனால் இந்திய அணியில் சுழற்சி முறையில் வீரர்களைக் கொண்ட் வரும் ரொட்டேஷன் பாலிசியை பிசிசிஐ அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன மூலம் சில குறிப்பிட்ட வீரரகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படாது. மேலும் வீரர்களுக்கு தேவையான ஓய்வும் கிடைக்கும்.

இவ்வாறு பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் இந்த ரொட்டேஷன் பாலிசி உள்ளது..

இங்கிலாந்து அணி ஐசிசி போட்டிகளில் நன்றாக ஆடுவதற்கு இந்த ஓய்வு முக்கிய காரணம் ஆகும். நியூசிலாந்து அணியிலும் இந்த ரொட்டேஷன் பாலிசி அதிகாரபூர்வமற்ற முறையில் உள்ளது. இந்திய அணியிலும் இந்த ரொட்டேஷன் பாலிசி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com