இந்தியாவில் பண்வீக்கம் அதிகரித்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் பண்வீக்கம் அதிகரித்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்திய பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பது பெரும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2-வது நிதிநிலை தன்மை அறிக்கை மும்பையில் வெளியிடப்பட்டது. அதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவின் பணவீக்க விகிதம் மோசமான நிலையில் இருக்கிறது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகள், அதனால் போடப்பட்ட முழு ஊரடங்கு ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலுருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில் இப்போது ஓமிக்ரான் தொற்று பெரும் சவாலாக மாறி உள்ளது. ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை மற்றும் முதலீடுகள் பலமாக இருக்கிறது. ஆனால் அதே நேரம் செயல்படாத சொத்துக்களின் எண்ணிக்கை 6.9ல் இருந்து 9.5%ஆக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com