இன்று ஆருத்ரா தரிசனம்: சிதம்பரம் ஶ்ரீநடராஜர் கோயிலில் கோலாகல உற்சவம்!

இன்று ஆருத்ரா தரிசனம்: சிதம்பரம் ஶ்ரீநடராஜர் கோயிலில் கோலாகல உற்சவம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஶ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் ந்டைபெற்றது. நடராஜ பெருமானுக்கு உரிய ராகம், தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

நேற்று ( டிசம்பர் 19) தேர்த்திருவிழாவும், இரவு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற்றது. இன்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு சித்திரசபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்ரசபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிசம்பர் 21-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

அதேபோல உத்தரகோசமங்கை கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அங்குள்ள பச்சை மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனத்தை எடுத்துவிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த ஒரு நாளில் மட்டுமே உத்தரகோசமங்கை மரகத நடராஜரை சந்தனக்காப்பு இல்லாமல் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பக்தர்கள் பெருந்திரளாக வந்திருந்து பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com