இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: மணற்சிற்பத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா!

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: மணற்சிற்பத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா!
Published on

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை கொண்டாடும் வகையில் ஒடிசாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை கடற்கரை மணலில் வடிவமைத்து அசத்தி உள்ளார்.

5400 ரோஜா மலர்களுடன் பிற பூக்களையும் சேர்த்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்திருப்பது காண்பவர் மனதை கொள்ளை கொள்கிறது. 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட இந்த சாண்டா கிளாஸ் சிற்பத்தை வடிவமைக்க 8 மணி நேரம் ஆனதாக தெரிவித்துள்ளார்.

அந்த மணல் சிற்பத்தில் "மெர்ரி கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் விழாவை கொரோனா விதிமுறைகளுடன் கொண்டாடி மகிழுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com