இன்று முதல் மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு: தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு!

இன்று முதல் மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு: தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வருவதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி, மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின் கட்டணத்தை நுகர்வோர் கணக்கிடும் வகையில் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் கட்டணமத்தை நுகர்வோரே கணக்கீடு செய்யப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் சோதனை முறையில் இம்முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் ரசீது வந்துவிடும். மேலும் இந்த மின் கட்டண ரசீது நுகர்வோருக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும். இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கட்டணத்தை கணக்கீடு செய்யலாம்.

-இவ்வாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com