0,00 INR

No products in the cart.

அமெரிக்கத் தீபாவளி

– ஆதித்யா

இந்த ஆண்டு இருளிலிருந்து வெளியே வருகிறோம்

மெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தீபாவளியைப் பிரமாதமாகக் கொண்டாடுவார்கள். வெள்ளை மாளிகையில் கூடக் கொண்டாடப்படுகிறது. பெரிய நகரங்களில் இந்தியச் சங்கங்கள் இசைக்கச்சேரி, நடனம் பார்ட்டி என அமர்க்களப்படுத்திவிடுவார்கள்.

ஆனால், அமெரிக்கர்களுக்குத் தீபாவளி என்றால் அது அவர்களுடைய சுதந்திர நாள்தான். நாடு முழுவதுமுள்ள அமெரிக்கர்களில் பலர் அதைத் தங்கள் வீட்டு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். பல அமெரிக்கர்களின் வீட்டு வாசலில் அவர்களின் தேசியக் கொடி பறக்கும். இந்த சுதந்திர நாளின் போது தினசரி ஏற்றப்படும் அந்தக் கொடிக்குப் பதிலாகப் புதுக்கொடி வாங்கி ஏற்றுகிறார்கள்.  இரண்டு வாரங்களுக்கு முன்னரே மால்களில் அதிரடி சேல் தொடங்கிவிடும். புதிய டிசைன் உடைகள் மலிவு விலையில் கிடைக்கும். நாட்டின் கொடி, சுதந்திர தேவியின் படத்துடன், வாசங்களுடன் கூடிய டி – ஷர்ட்கள், டாப்கள் எல்லாம் மிகவும்  மலிவு விலையில் கிடைக்கும். அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் வாங்கப்படும் ஐட்டம் இது.

அந்த நாளுக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கேக்குகள், குக்கி, ஐஸ்கிரீம் ஐட்டங்கள் விற்பனையில் முதல் இடம் பிடிக்கும்.

அன்று காலை வாஷிங்டனில் நடைபெறுவதைப் போல எல்லா மாநில தலைநகரங்களிலும் அணிவகுப்பு இருக்கும். அதைப் பார்த்தபின் நண்பர்கள் வீடுகளில் மதியவுணவு. மாலையிலேயே இரவு நடக்கப்போகும் வாணவேடிக்கையைப் பார்க்கத் தயாராகிவிடுவார்கள். அமெரிக்காவில் வீடுகளில் வெடி வெடிப்பது, மத்தாப்புகள் கொளுத்துவது குற்றம். அதை ஒரு பொது இடத்தில் விழாவாக நடத்துவதை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

எல்லா அமெரிக்க நகரங்களிலும் கடற்கரை, நதிக்கரை அல்லது பொது வெளியில் இந்த வாண வேடிக்கை நடைபெறும். இதைத் தனியார் நிறுவனங்களோ அல்லது நகர நிர்வாகமோ நடத்துகிறது. கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், கூட்டத்தை அழகாக நிர்வகிக்கிறார்கள். ஆன்லைனில் பார்க்கிங் இடம் மூன்று நாள் முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த இடத்திற்கு அருகிலிருந்து வாண வேடிக்கைகளைப் பார்க்கலாம். பல குடும்பங்கள் வீட்டிலிருந்தே சாப்பாடு ஐட்டங்களுடன், டேபிள், சேர் (சோபா கூட) எல்லாம் கொண்டு வந்து இரவு டின்னருடன்
வாண வேடிக்கையைப் பார்த்து மகிழ்கிறார்கள். அமெரிக்காவில் தேசியக் கொடியை உடையாகப் பயன்படுத்த தடை ஏதுவுமில்லை என்பதால் குழந்தைகளும் குழந்தைகளான பெரியவர்களும் கொடி, வாசகங்கள் படம் போட்ட புது டீ – ஷர்ட், புதுத் தொப்பிகள் எனக் கலக்குகிறார்கள்.

வாண வேடிக்கை என்பது ஆண்டுதோறும் வெகு அழகாகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. மிகப் பிரம்மாண்ட சைசில் வானில் சென்று விரியும் வண்ண ஒளிப்புக்கள், நட்சத்திரக் கூட்டங்கள் சீறிப்பாய்ந்து தொலைவில் பூக்கும் ஒற்றைப் பூ என வானமே வண்ணக் கலவையாகி பிரமிப்பூட்டுகிறது. ஒவ்வொரு முறையும் கரகோஷமும், ஓங்கிய குரலில்
ஓ எனவும் ஒலிக்கிறது.

ஒன்று உயர்ந்து அடங்கும்போது அடுத்தது எழும் நீர் ஊற்றுக் காட்சியை ஒளியில் வானில் காட்டுகிறார்கள்… கண்கொள்ளாக் காட்சி.

இந்த வாண வேடிக்கைகளுக்காகப் பெருமளவில் செலவிடப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதிலும் சேர்த்து 13 மில்லியன் டாலர்கள் என்கிறது ஒரு செய்தி.(ஒரு மில்லியன் 10 லட்சம்) இது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. லேசர் கதிர்களால் இயங்கும்  இந்த வண்ண மத்தாப்புகளின் வடிவங்கள் கம்ப்யூட்டரில் திட்டமிடப்பட்ட நிரல்கள். அதனால் ஆபத்தில்லை. நெருப்பாக அது தரைக்கு வர வாய்ப்பில்லை.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையிலிருந்து  அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்தி வழங்குகிறார்.

அதைத்தொடந்து அங்கு வாண வேடிக்கைத் தொடங்குகிறது. இந்த ஆண்டு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட கோவிட் தடுப்பில் ஈடுபட்டிருந்த
முன்களப் பணியாளர்கள் முன், ஜோ பைடன் வழங்கிய செய்தி சற்று வித்தியாசமானது

இந்த ஆண்டு, ஜூலை நான்காம் தேதி ஒரு சிறப்புக் கொண்டாட்டத்தின் நாளாகும், ஏனென்றால் தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆண்டு, வலி, பயம் மற்றும் இதயத்தை நொறுக்கும் இழப்பு ஆகியவற்றின் இருளிலிருந்து நாம் வெளிவருகிறோம்” 

அதைத் தொடர்ந்து அமெரிக்கத் தலைநகர் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதி முழுவதும் பார்க்கும்படியான வாணவேடிக்கைகள் புகழ்பெற்ற அமெரிக்க நினைவிடங்களின் பின்னணியாக வண்ண மத்தாப்பூக்கள் மலர்கின்றன. தொடர்ந்து திறந்தவெளி அரங்கில் நள்ளிரவு வரை அமெரிக்காவின் மிகச் சிறந்த இசைக்குழுவின் இசை.

அமெரிக்க நாடு நான்கு டைம் சோன்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் வெவ்வேறு இடங்களில் இரவு நேரம் மாறும். அதனால், நாள் முழுவதும் இந்த வாண வண்ண மலர் காட்சிகளை நாடு முழுவதும் டி.வி.யில் பார்க்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் – குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் குதூகலமாகப் புத்தாடை அணிந்து, விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கேக் வகைகளை ஒரு கைபார்த்து, மத்தாப்பு வேடிக்கைகளைப் பார்த்து மகிழும் அமெரிக்கர்களுக்கு இந்த நாள் தானே தீபாவளி.

1 COMMENT

  1. நன்றி.அமெரிக்கா செல்ல முடியாதவர்கள் படித்து பார்த்து மகிழ்ந்து நிறைய தெரிந்து கொள்ள வைத்த பதிவு.
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

மீண்டும் உருமாறும் கொரோனா, உஷார்!

  டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வேற்றுருவம் (Variant) மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதன்முதலில்...

அபிஜித் ஒரு பொருளாதார நிபுணர் என்பதைவிட சிறந்த சமையல்காரர்

0
- அபர்ணா அல்லூரி   2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றவர் அபிஜித் பானர்ஜி. அபிஜித் பானர்ஜி முதன்முதலில் உணவைச் சமைத்தபோது அவருக்கு வயது 15.  சமையலறையில்  இப்போது அவரின் பரிசோதனைகள் ஓர் ஆச்சரியமான சமையல் புத்தகத்தையே உருவாக்கியிருக்கின்றன. "இதில் முரண்நகை என்னவென்றால், ‘அபிஜித்...

“நான் மாடல் இல்லையே!”

0
- ஆறுமுகம் செல்வராஜு   ஐரோப்பிய இரும்பு பெண்மணி ஜெர்மனியின் தேவதை, என வர்ணிக்கப்படுபவர்  அங்கெலா. இவரைப்போன்ற ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைப்பாரா? உலகின் மிகப்பெரிய ஆளுமை நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்குப் பதினாறு ஆண்டு காலமாக அதிபராகவும், ஐரோப்பிய...

தமிழ் நாட்டுக்கு என்று பிறந்த நாள்?

0
- ஹர்ஷா   தமிழ்நாடு நாள் பற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அது குறித்த ஒரு பார்வை... மொழிவாரி மாநிலங்கள் பல்வேறு போராட்டங்கள், ஆலோசனைகளுக்குப் பிறகு ‘1956, நவம்பர் 1-ம் தேதி முதல்,...

தங்க முட்டையா, நீர்க்குமிழியா

- சோம. வள்ளியப்பன்   கிரிப்டோ- பிட்காயின் விலை உயர்வு ஓர் அலசல்   “இதுதான் அடுத்த பெரிய விஷயம்” “சுலபமான பணம்” “முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெரும் லாபம் பார்த்திருக்கிறார்கள்” “கடந்த சில ஆண்டுகளாகவே கொட்டிக்கொடுத்திருக்கிறது. நான் பெரும் வாய்ப்பை இழந்துவிட்டேன்....