
ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் என்றும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெறும் என்றும் முன்னதாக ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் தெரிவித்தார்..இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று சென்னை வந்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த எந்த வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள அவர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு தோனி வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.