இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on

தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர் டி.இமான் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தன் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இமானுக்கு மோனிகா ரிச்சர்ட் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாவது:

நானும் என் மனைவி மோனிகாவும் விவாகரத்து செய்துள்ளோம். இனி நாங்கள் சட்டபூர்வமாக கணவன் மனைவி இல்லை. எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தொடர அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு டி இமான் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு திரையுலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com