தோகைச் சிறகடிக்க..

தோகைச் சிறகடிக்க..
Published on

பட்டாம் பூச்சியாய் மாறும்வரை,
பளபளக்கும் புழுவே..
கூட்டுக்குள் அடைபட்டு தவநிலையில்..
தன்னிகரற்ற தோகையை ( சிறகை) பெறுகிறாயோ?
மௌனமும், பொறுமையும் இதற்காக மட்டுமா?!

………………………………………….

சொல்லும்.. முள்ளும்!

சொல்லில்லா மனிதரில்லை
முள்ளில்லா தாவரமில்லை,
சொல்லில் (கனி)வையும்,
முள்ளில் மலரையும் தேடு,
வசந்தம் உன் வாயிலில்….

………………………………………….

ரோஜா.. ரோஜா..

அழகாய் பூத்திருக்கிறது,
ஆசையாய் காத்திருக்கிறது
சூடும் சிரசை எண்ணி!
சுவற்றோரம். சாய்ந்திருக்கும்
பூவிற்கு தெரியாது –
சுவரும் அதை காதலிக்கும் என…!

– ஸ்ரீவித்யா பிரசாத், சென்னை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com