கிரேட்டர் லேக் சூப்பர் கிரேட்!

கிரேட்டர் லேக் சூப்பர் கிரேட்!

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஓரகான் மாநிலத்தில் இயற்கையாக உருவான, அழகும் அற்புதமும் பிரமாண்டமும் கொட்டிக் கிடக்கும் மிகப்பெரிய ஏரி 'கிரேட்டர் லேக்'.

சுமார் 7700 ஆண்டுகளுக்கு முன் உயரமான மலை சிகரம் ஒன்று இருந்த இடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், மலை சிதைந்து அதனால் ஏற்பட்ட பள்ளத்தில் மழை நீராலும் பனிக்கட்டி உருகி வரும் நீராலும் உருவானது இந்த ஏரி. இது சுமார் 2000 அடி ஆழமும் 8 கிலோமீட்டர் விட்டமும் கொண்டுள்ளது. ஏரியின் நடுவே சிறிய தீவு போன்ற குன்று ஒன்றும் அமைந்துள்ளது. ஏரி நீரின் டீப் ப்ளூ நிறமும் பரிசுத்தத் தன்மையும் அதன் அபரிமிதமான அழகிற்கு அழகு சேர்ப்பவை.

இந்த ஏரியைப் பார்க்கச் செல்ல விருப்பம் உள்ளவர்கள், சீசன், திறந்திருக்கும் நாட்கள், தூரம் மற்றும் முன்னேற்பாட்டிற்கான அனைத்து விஷயங்களையும் நன்கு தெரிந்துகொண்டு செல்வது நலம்.

– ஜெயகாந்தி மகாதேவன், சென்னை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com