0,00 INR

No products in the cart.

சுண்ணாம்பு குகை அற்புதம்!

மேகாலாயாவில் உள்ள சிரபுஞ்சி அருகே மவ்ச்மை குகை (Mawsmai Caves) உள்ளது. இதன் நீளம் 150 மீட்டர். பூமிக்கடியில்  இயற்கையின் கைவண்ணத்தில் சுண்ணாம்புக் கற்களாலான,அழகிய வித்தியாசமான உருவங்களை தன்னுள் மறைத்துக் கொண்டுள்ளது. குனிந்து நடந்து செல்லும் போது நம் மீது விழும் நீர் துளிகள் ஒரு சிலிர்பை ஏற்படுத்தும்.

…………………………………………

தோகை இள மயில் ஆடி வரும்!

எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு சிறிய மலை இருப்பதால் அடிக்கடி அங்கிருந்து நிறைய மயில்கள் வரும்.. அவைகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் நீர் வைப்பேன். அதை குடிக்க வந்த மயிலை எடுத்த போட்டோ. அதுவும் தைப்பூசத்தன்று…

………………………………………..

பனி விழும் மலர் வனம்!

பனி விழும் மலர் வனம் என்ற இனிய பாடலை நினைவு படுத்தும் வண்ணம் , ஊட்டியில் நாங்கள் தங்கி இருந்த போது பனி படர்ந்த காலை நேரத்தில் இயற்கை அன்னையின்  அழகை ரசித்துப் பார்த்து பிரமித்தேன்…மழையும் அழகு,பனியும் அழகு,வெய்யிலும் அழகு என இயற்கையின் படைப்பை என்று எண்ணி மகிழ்ந்தேன்.

…………………………………………

கிளிகொஞ்சும் போட் பிளவர்ஸ்!

இயற்கையின் அற்புதங்களில் வாசமிகு வண்ணமலர்களின் பங்கு ஏராளம். தனது நறுமணத்தாலும், அழகிய வண்ணங்களாலும் ,வித்தியாசமான வடிவிலும் நம்மை பிரமிக்க வைக்கும்.

அப்படி நான் பார்த்து மயங்கியது (Parrot Flower) பேரட் பிளவர் தான். கிளிகள் ஒரு கொம்பில் வரிசையாக பல வண்ணத்தில் அமர்ந்து உள்ளது போன்ற தோற்றம் அதிசயமே…

– பானு பெரியதம்பி, சேலம்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

முக்கடல் சங்கமிக்கும் கன்யாகுமரி!

0
இயற்கை தந்த அற்புதம் என்றதும்... என்றென்றும் மங்காத சூரிய ஒளியில் உதயமாகும் இடம்... முக்கடலும் சங்கமமாகும்... அன்னை பார்வதி தேவி கன்யாகுமரி அருள்பாலிக்கும் இடம்... அட நம்ம "கன்யாகுமரி"தாங்க! இயற்கை எழில் கொஞ்சும் அற்புதம்.சூரியத்தேவன்...

அமைதி போதிக்கும் புத்தகயா!

0
அமைதி, சமாதானம் போதித்த, புத்தன் ஞானம் பெற்ற புண்ணிய பூமி புத்த கயா. மழை மேகம் சூழ்ந்த நேரத்தில் மிகுந்த பாதுகாப்பு உள்ள பகுதியில் எடுக்கபட்ட படம். அந்த போதி மரம்,அதன் இலைகள் பார்த்து...

மேகங்கள் வசிக்கும் மேகாலயா!

0
தென்கிழக்கு இந்தியாவில் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி என்னும் இடம் உலகிலேயே அதிக மழைப் பொழிவைப் பெறும் இரண்டாம் இடமாகும்.நாட்டின் உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான நோகலிகை  நீர்வீழ்ச்சியும் இங்கு உள்ளது. இது 1115 அடி...

வானும் பூமியும் ஹாய் சொல்லுமே!

0
இந்த இடம் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா க்ரூஸ் என்ற பீச். வானமும் பூமியும் சங்கமிப்பது போல் காட்சி தரும் மிகவும் அழகான இடம். கடற்கரையின் அழகைப் பருகிக் கொண்டே நடப்பதற்கு தோதான மிக...

கிரேட்டர் லேக் சூப்பர் கிரேட்!

0
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஓரகான் மாநிலத்தில் இயற்கையாக உருவான, அழகும் அற்புதமும் பிரமாண்டமும் கொட்டிக் கிடக்கும் மிகப்பெரிய ஏரி 'கிரேட்டர் லேக்'. சுமார் 7700 ஆண்டுகளுக்கு முன் உயரமான மலை சிகரம் ஒன்று...

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field