இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரியக் கட்டிடம்: 24 வீடுகள் தரைமட்டம்!

இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரியக் கட்டிடம்:   24 வீடுகள் தரைமட்டம்!

சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் இருந்த 24 வீடுகளும் நொறுங்கித் தரைமட்டமாயின. உயிர்ச்சேதம் எதுமில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வெளியான தகவல்:

திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இன்று காலை திடீரென விரிசல் ஏற்பட்டதை கண்டு, அக்குடியிருப்புவாசிகள் உடனடியாக முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில் கட்டடம் இடிந்து விழ்ந்து அக்குடியிருப்பில் இருந்த 24 வீடுகளும் தரைமட்டமாயின. மேலும், கட்டிட இடிபாடுகளில் உயிர் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளுக்கிடையே யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடி வருகின்றனர். இந்தத் தேடுதல் பணியில் அப்பகுதி பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த குடிசைமாற்று வாரியக் கட்டிடம் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று காலையில் கட்டிட விரிசலைக் கண்டு மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும்போதே கட்டிடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com