0,00 INR

No products in the cart.

‘ஜெய் பீம்’ பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருகிறேன்: ராகவா லாரன்ஸ்!-

வி. கார்த்திகேயன்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்தஜெய் பீம்’ படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தை இயக்கியவர் .செ.ஞானவேல். ஜெய் பீம் படமானது பழங்குடியினத்தை சேர்ந்த ராசாக்கண்ணு, பார்வதி ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகப் பட்டதாக இயக்குனர் தெரிவித்திருந்தார். தற்போது பார்வதி (படத்தில் செங்காணி கேரக்டர்) வறுமையில் வாடி வருகிறார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவைப் பார்த்தபின், பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது:

ராசாக்கண்ணு தான் செய்யாத குற்றத்துக்காக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் அவர் மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் வாடுவதையும் அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அதனால் பார்வதி அம்மாளுக்கு என்னுடைய சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறேன். சுமார் 28 வருடங்களுக்கு முன் நடந்த கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசும் பொருளாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கு நன்றி.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

சட்டென்று மாறுது வானிலை: சென்னை வானிலை ஆய்வுமைய முன்னாள் இயக்குனர் ரமணன்!

0
நேர்காணல்: காயத்ரி தமிழகத்தில் மழைக்காலம் வந்தாலே மனதில் சட்டென்று தோன்றுபவர், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் திரு. ரமணன். ‘’கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்..’’...

பெருமாளுக்கு இறுதி நாள் வரை சேவை செய்யணும்: டாலர் சேஷாத்ரி!

0
-காயத்ரி. திருப்பதிதிருமலை கோவிலின் சிறப்புப் பணி அதிகாரியாகப் பணியாற்றிய டாலர் சேஷாத்ரி இன்று (நவம்பர் 28) அதிகாலையில் மாரடைப்பால் இறந்தார். திருமலை திருப்பதி கோயிலில் 1977-ம்ஆண்டுடாலர் சேஷாத்ரி பணியில்சேர்ந்தபோது, பெருமாளின் திருவாபரணங்களை நிர்வகிக்கும் பொக்கிஷதாரர் பணிவழங்கப்பட்டது....

சிம்புவின் மாநாடு ரிலீஸ்: தடைகளை உடைத்து வெளியானது!

0
நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான ‘மாநாடு’ படம் ரிலீஸாவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்து ஒருவழியாக இன்று ( நவம்பர் 26) ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு...

கேப்டன் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு!

0
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விமானி கேப்டன் அபிநந்தனுக்கு இன்று ‛வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த...

தீபத் திருநாளில் முருக தரிசனம்!

0
தொகுப்பு : ஆர்.ஜெயலெட்சுமி திருச்செந்தூரில் கொடி மரத்திலிருநது வலமாக அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், ‘ஓம்’ என்ற வடிவில் அப்பாதை அமைந்துள்ளதை உணரலாம். திருச்செந்தூரில் மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர்...