ஜனவரி 27-ல் டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா ஒப்படைப்பு!

ஜனவரி 27-ல் டாடா நிறுவனத்திடம்  ஏர் இந்தியா ஒப்படைப்பு!
Published on

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ஜனவரி 27-ம் தேதி டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஒப்படைக்கும் என்றந்தகவல் வெளியாகியுள்ளது.

துகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதி இயக்குநர் வினோத் தன் ஊழியர்களுக்கு பகிர்ந்துள்ள செய்தியில் குறிப்பிட்டதாவது;

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஜனவரி 27 ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது. இறுதி செய்யப்பட்ட பேலன்ஸ் ஷீட், ஜனவரி 24 ஆம் தேதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து டாடா குழுமம் அதனை மதிப்பாய்வு செய்து, புதிய மாற்றங்கள் கொண்டு வரலாம். எனவே அடுத்த 3 நாட்களுக்கு பணிகள் கடுமையாக இருக்கும். நாம் விலகுவதற்கு முன் இந்த மூன்றுநான்கு நாட்களில் உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கொடுக்கப்பட்ட பணியை முடித்திட, இரவு வெகுநேரம் உழைக்க நேரலாம். இதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம், ஏர் இந்தியாவை ரூ18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஏர் ஏஷியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமானமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com