0,00 INR

No products in the cart.

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி பரிசுக்கதை – 2

அவர் பொருட்டு பெய்யும் மழை!

கதை      : ஆதலையூர் சூரியகுமார்
ஓவியம் : லலிதா

சின்ன வரப்பில் இருந்த நுனா மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தார் கதிர்வேல் தாத்தா. ‘தன் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் போய் விட்டதேஎன்ற வருத்தம் அவர் முகத்தில் பரவியிருந்தது. தலைக்கு மேல் கட்டியிருந்த துண்டை எடுத்து தனது பத்து நாள் வெள்ளை தாடியை துடைத்துக் கொண்டார்.

வாய்க்காலில் தண்ணீர் நின்று போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. கடந்த பத்து நாட்களாக வாய்க்காலில் பாய்ந்த தண்ணீரின் ஈரத்தில் வரப்புகளில் புற்கள் முளைத்திருந்தன.

ஆதலையூர் சூரியகுமார்

பக்கத்திலிருந்த வயல்களில் எல்லாம் பத்து நாள் நாற்று பசுமையாக வளர்ந்திருந்தது. தண்ணீர் வந்தவுடனேயே நாற்றங்கால் பாத்தி கட்டி விதை விதைக்கிற வேலையை அவர்கள் செய்து விட்டார்கள். எல்லா வருடமும் கதிர்வேல் தாத்தா கவனமாகத்தான் இருப்பார். இந்த முறை விதை விதைக்க அவர் போட்ட திட்டம் எப்படியோ அவரை ஏமாற்றிவிட்டது.

றுபது ஆண்டுகள் விவசாயத்தில் இதுமாதிரி எத்தனையோ சிக்கல்களை அவர் பார்த்திருக்கிறார்.

இந்த நானூறு குழி நிலம்தான் கதிர்வேலு தாத்தாவுக்கு சொத்து. நானூறு குழி நிலத்தையும் இரண்டு மாடுகளையும் வைத்துக்கொண்டு தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். மகனை படிக்க வைத்திருக்கிறார். அவ்வளவு கடினமான உழைப்பாளி. இத்தனைக்கும் கை ஏர் வைத்துதான் நிலத்தை உழவு செய்வார். டிராக்டர் எல்லாம் கிடையாது அவரிடம்.

என்ன கதிர்வேலு பெரிய டிராக்டர் வந்துடுச்சு, கை டிராக்டர் வந்துடுச்சு. இப்பவும் காளை மாட்டையும் கட்டை ஏரையும் வச்சுக்கிட்டு நாள் முழுக்க உழுதுகிட்டு இருக்க?” என்று முத்தையன் அடிக்கடி கதிர்வேலுவை கேலி பேசுவார்.

நீ என்னை கேலி பண்ணினாலும் சரிப்பா, டிராக்டர் எல்லாம் வச்சு வயலை உழவு செஞ்சா வயலுக்கு வலிக்குமோன்னு எனக்கு தோணுது” என்பார். எல்லோரும் சிரிப்பார்கள்.

செயற்கை உரங்களை வாங்கிப் போட்டதே இல்லை. சித்திரை, வைகாசியில் வீட்டுக்கு வீடு போய் அவர்கள் சேர்த்து வைத்திருக்கிற சாணத்தை முட்டு முட்டாக அள்ளிக் கொண்டு வந்து தன்னுடைய வயலில் கொட்டிக் கொள்வார்.

நான் எப்படி இயற்கையா சாப்பிட்டு வளர்ந்தேனோ, அதுமாதிரிதான் என் பயிரும் வளரணும்” என்பார்.

பயிர்களை பூச்சி தாக்கினால் எல்லோரும் பதறிப்போய் விடுவார்கள்.

ந்தா கதிர்வேலு உன் வயல்ல பச்சைப் புழு தாக்குதல் அதிகமா இருக்கு, நம்ம செட்டியார் உரக்கடையில் புதுசா பூச்சிக்கொல்லி வாங்கி வச்சிருக்கார், ஒரு லிட்டர் வாங்கினா போதும் தண்ணியில கலந்து உன் வயல் முழுக்க தெளிச்சு விடலாம்” என்று அரக்கப்பரக்க ஓடி வந்து சொல்வார் முத்தையன்.

கதிர்வேலு கேட்கவே மாட்டார். வேப்பந் தழைகளை அரைத்து, கரைத்து வயல்வெளியில் தெளிப்பார்.

என்னமோ பண்றாருப்பா, ஆனா அவருக்கும் நல்லாத்தான் விளையுது” என்று கதிர்வேல் தாத்தாவை எல்லோரும் பொறாமையோடு பேசுவார்கள்.

எல்லாம் நீங்களாக இழுத்துக் கொண்ட வினைதான். நீங்கதான் எப்பப் பார்த்தாலும் நியாயம் தர்மம்னு பேசிக்கிட்டு அலையறீங்களே! அப்புறம் இப்படித்தான் ஆகும்” மனைவி கத்தினாள்.

ஒருவேளை அப்படி அவர்கள் பொறாமைப் பட்டதால்தான் இந்த வருடம் விதைக்கக் கூட முடியாமல் போய்விட்டதோ?

ரண்டு வாரங்களுக்கு முன்பு வெண்ணாற்றில் தண்ணீர் வந்தபோது பத்து நாளைக்கு விசலூர் முறை என்று சொல்லி தண்ணீர் விட்டார்கள். சம்சாரிகள் எல்லோரும் ஆற்றில் வருகிற தண்ணீரை முதலில் அவரவர் வயல்களுக்கு வைத்துக்கொள்ள முண்டியடித்தார்கள். கதிர்வேல்தான், ‘அது முடியவே முடியாதுஎன்று நின்றார்.

எப்போது ஆற்றில் தண்ணீர் வந்தாலும் முதலில் ஊர் குளத்திற்குத்தான் பாய்ச்ச வேண்டும். பொதுக்குளம்தான் முதலில் நிரம்ப வேண்டும், பொதுக்குளம் நிரம்பினால்தான் நிலத்தடி நீர் மட்டமும் உயரும், வறட்சி வராது, ஆடு மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். முக்கியமாக, ஊர்க் குருவிகளுக்கும் பறவைகளுக்கும் எல்லாம் தண்ணீர் கிடைக்கும்” என்றார்.

இங்க மனுஷனுக்கே தண்ணீர் கிடைக்கல, முறை வச்சிதான் தண்ணீர் வருது, இதில் ஆடு மாடு, காக்கா குருவிக்குன்னு தண்ணி வச்சுக்கிட்டு இருந்தா சம்சாரிங்க எப்படி சாகுபடி பண்றது? இன்னும் நீங்க அந்தக் காலத்திலேயே இருக்கீங்களே தாத்தா!”

சம்சாரிகள் சிலர் பொங்கிக்கொண்டு வந்தார்கள். விஷயம் ஊர் பஞ்சாயத்து வரை போனது.

இரண்டு மூன்று பேர் மட்டுமே கதிர்வேல் தாத்தாவுக்கு ஆதரவாகப் பேசினார்கள்.

கதிர்வேலு சொல்றதும் சரிதாம்ப்பா” முதல்ல பொதுக்குளம் நிறையட்டும். பொதுக்குளம் நெறஞ்சாதான் ஊருக்குள்ள நிலத்தடி நீர் உசரும், பச்சபட்டு துளிர்க்கும்” என்று அய்யாக்கண்ணு மிராசுதார் சொன்னார்.

விசலூரில் பத்து வேலி நிலத்துக்கு சொந்தக்காரர். ஊரின் பெரும் பகுதி நிலத்தில் சாகுபடி செய்பவர். ஆனால், அய்யாக்கண்ணு சொன்னதையும் யாரும் கேட்டுக் கொள்ளவில்லை.

விவசாய வேலைகளுக்குதான் முதலில் தண்ணீர் விட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள்.

முப்பது நாளில் நாற்று வளரணும், பிறகு நடவு வயலை சேறு குழப்பி சரி செய்யணும், நடவு நடணும், களை எடுக்கணும். குளத்தை நிரப்பிக்கிட்டு உட்கார்ந்தா, நடவு நட லேட்டாயிடும். அப்புறம் ஐப்பசி தொடங்கி மழை வந்துருச்சுன்னா பயிர் எல்லாம் நாசமாப் போய்டும்” என்று நாட்டாமையிடம் சொன்னார்கள்.

ஏய்யா கதிர்வேலு, மத்த சம்சாரிங்க சொல்றதும் நியாயமாதான் படுது, சீக்கிரம் வெதைச்சாதான் வெள்ளாமை வீடு வந்து சேரும், குளத்தையும் குட்டையையும் நிரப்பிக்கிட்டு இருந்தா விவசாயத்துக்கு தண்ணி இல்லாம போயிடும்” என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டார் நாட்டாமை.

யார் என்ன வேணாலும் செஞ்சுக்கோங்க, உங்க வயல்ல எல்லாம் நாத்து வெதச்ச பிறகு, நான் குளத்தை நிரப்பி விட்டு அதுக்கப்புறம் என் வயல்ல பாத்தி கட்டி நாத்து வெதச்சிக்கிறேன்” என்று சொல்லி விட்டு வந்தார் கதிர்வேலு தாத்தா.

சொன்ன மாதிரியே ஊர்க்காரர்கள் எல்லோரும் தங்கள் வயல்களுக்கு நீர் பாய்ச்சி பாத்தி கட்டி நாற்றங்கால் தயார் செய்து விதைத்து விட்டார்கள். பத்து நாட்கள் ஓடிவிட்டன. அதற்குப் பிறகு தனியாளாய் நின்று வாய்க்காலில் மடையைத் திறந்து குளத்துக்கு நீர் நிரப்பினார் கதிர்வேலு தாத்தா. பெரியகுளம் நிரம்புவதற்கு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது.

ன்றைக்கு எப்படியும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி பாத்தி கட்டி நாற்றங்கால் தயார் செய்து விடலாம்’ என்று வயலுக்கு வந்த கதிர்வேலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆற்றில் தண்ணீர் முறையை நிறுத்தியிருந்தார்கள்.

மறுபடியும் தண்ணீர் வருவதற்கு பதினைந்து நாட்கள் ஆகிவிடுமே?’ என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார் கதிர்வேலு தாத்தா.

சொன்னா கேட்டியா? என்னமோ குளம் நிரம்பணும்குட்டை நிரம்பணும்னு சொல்லிக்கிட்டு இருந்த. இப்ப என்ன ஆச்சு? விதை தெளிக்க முடியாம போச்சுல்ல!” என்று முத்தையன் முகத்துக்கு நேரே குத்திக்காட்டி பேசினார்.

அய்யாக்கண்ணு மிராசுதார் தனது வயல்களை பார்த்தபடி குடை பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

கதிர்வேலு தாத்தா எழுந்து கொண்டார்.

ன்னய்யா கதிர்வேலுதண்ணீர் முறை நின்னு போச்சா? ஊருக்கே தண்ணீர் கொடுக்கணும்னு நினைச்ச. ஆனா, கடைசியில உன் வயலுக்கே தண்ணி இல்லாம போச்சே! ஆனாலும், நீ பண்ணின நல்ல காரியத்தாலதான் ஊரே செழிப்பா இருக்கு. குளத்தை நிரப்பினதால ஊருக்குள்ள நிலத்தடி நீர் ஒசந்திருக்கு. என்னோட தோட்டத்து கிணறுலகூட நிறைஞ்சு நிக்குது. கிணத்துக்குள்ள கையை விட்டு தண்ணி எடுக்கிற அளவுக்கு தண்ணி மேல நிக்குது. தோட்டத்தில் போட்ட காய்கறிகள் எல்லாம் தழைஞ்சிருக்கு. நீ மட்டும் குளத்தில் தண்ணீர் நிரப்பலைன்னா என்னோட தோட்டமே கருகிப் போயிருக்கும். அதுமட்டும் இல்ல; நீ சொன்ன மாதிரி காக்கா குருவிக்குக்கூட தண்ணி கிடைக்காமல் போயிருக்கும்.”

நீ ஒண்ணும் கவலைப்படாத கதிர்வேலு! என்கிட்ட ஐந்நூறு அடி நீளத்துக்கு ரப்பர் குழாய் இருக்குது. என்னுடைய கிணத்திலிருந்து போர் போட்டு உன் நிலத்துக்கு தண்ணி எடுத்துக்கோ. விதைக்க லேட்டாயிடுமேன்னு வருத்தப்பட வேண்டாம். என்கிட்ட வீரிய நாத்து விதை இருக்கு. இப்ப விதைச்சா போதும், இருபது நாள்ல நாத்து வளர்ந்திடும். ஊருக்கு முன்னாடியே நீ நடவு நட்டுடலாம்.”

. . . . . . .“

ஊருக்கே தண்ணீர் கொடுத்த உனக்கு நான் தண்ணி கொடுக்கலைன்னா, நாளைக்கு ஊர்ல எப்படி மழை பெய்யும்? வாய்யா இப்பவே மோட்டார் போட்டு விடுறேன்” என்றார் அய்யாக்கண்ணு.

கதிர்வேலு மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே அய்யாக்கண்ணுவைப் பார்த்தார்.

கதிர்வேலு மாதிரி ஆளுங்ககிட்ட மழை பெய்ய வைக்கிற சக்தி இருந்தா போதும்யா, உலகம் ஒரே நாள்ல செழிப்பாய்டும்” அய்யாக்கண்ணு சொல்லிக் கொண்டே நடந்தார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...