ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரோம் பயணம்!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரோம் பயணம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இத்தாலி தலைநகர் ரோமில் நாளை நடக்கவுள்ள ஜி-20 மற்றும் சிஓபி-26 மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி இன்று ரோம் சென்றடைந்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு மற்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
பிரதமர் மோடி இத்தாலியில் நாளையும் நாளி மறுநாளூம் (அக்டோபர் 30 மற்றும் 31) நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று ரோம் புறப்பட்டு சென்றார். மேலும் ரோமிலிருந்து கிளாஸ்கோ சென்று அங்கு உலக நாடுகளின் முக்கிய தலைவா்கள் பங்கேற்கும் சிஓபி-26 மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதில் உலக நாடுகளின் முக்கியத் தலைவா்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். ஜி-20 மாநாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சா்வதேச பொருளாதாரம், சுகாதார மீட்சி, பருநிலை மாற்றம் குறித்து பிரதமா் மோடி பிற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

–இவ்வாறு அநத அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com