ஜோக்ஸ்

படங்கள் : பிரபுராம்
படங்கள் : பிரபுராம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

"இந்த வருஷ தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் பட்சணம் செய்யப்போறே?"

"இஞ்சி அல்வா, மிளகு லட்டு, சுக்கு பாயசம்!"
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

————–

"இது வக்கீலுக்கு சொந்தமான
ஆட்டோன்னு
எப்படிச் சொல்றே
?"

''கோர்ட்டுக்கு இலவசம்'னு
எழுதியிருக்கே
."
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

————–

"வாத்தியார் என்னோட ஆன்சர் பேப்பரை படிச்சுப் பார்க்காமலே மார்க் போட்டிருக்காருன்னு தோணுது?"

"எப்படி சொல்றே?"

''சிங்கள் டிக்' தானே இருக்கு… டிக் புளுவா மாறலையே!"
– வி.ரேவதி, தஞ்சை

————–

"கேஸ் டிரபிள்னு
ரொம்ப நாளா
டாக்டர்கிட்ட போனீங்களே
,
இப்ப தேவலையா சார்?"

"கேஸ் டிரபிள் போய்,
கேஷ் டிரபிள் வந்துவிட்டது.
– வி.ரேவதி, தஞ்சை

————–

"அவர் டூ இன் ஒன் டாக்டர்னு
சொல்றியே
…
எப்படி?"

"ஆமா… ஆபரேஷன், போஸ்ட்மார்டம் ரெண்டையும்
அவரே பார்ப்பாரு
…"
– நிலா, திருச்சி

————–

"குற்றப் பத்திரிகையில்கூட இப்படியா போடுவாங்க?"

"என்ன போட்டிருக்காங்க?"

"நம்பர்1
பத்திரிகையாம்!"
– எஸ்.மோகன், கோவில்பட்டி

————–

"பட்ஜெட்டில் ஒரு வரி கூட போடலியே?"

"அதைப் பற்றி ஒரு வரி
உங்க பத்திரிகையில் போடுங்க
…"
– எஸ்.மோகன், கோவில்பட்டி

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com