ஜன் தன் வங்கிக் கணக்குக்கு சேவைக் கட்டணம் இல்லை: எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு!

ஜன் தன் வங்கிக் கணக்குக்கு சேவைக் கட்டணம் இல்லை: எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு!
Published on

இந்தியாவின் மிகப் பெரிய பொதுதுறை வங்கியான ஸ்டேட் பாங்க், இனி ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு பரிவர்த்தனை சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது:

நாட்டில் ஏழை மக்களுக்கு வங்கிக் சேவை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மூலம் தொடங்கப்பட்டது ஜன் தன் வங்கிக் கணக்குகள். இதிலும் மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு வசூலிப்பது போலவே, மாதம் 4-க்கு மேறபட்ட பரிவர்த்தனைகளுக்கு வங்கி சேவை கட்டணம் வசூலித்து வந்தது. இப்போது ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஏற்கனவே வசூலித்த தொகையையும் ஸ்டேட் பாங்க் மீண்டும் அவரவர் கணக்கில் திருப்பி செலுத்தப் பட்டு வருகிறது.

-இவ்வாறு எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இதனால் ஜன் தன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடிந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com