0,00 INR

No products in the cart.

#JusticeForMamita: பள்ளி ஆசிரியை கொலையில் டிரெண்டிங் ஹேஷ்டேக்!

ஒடிசா மாநிலைத்தில் மர்மமான முறையில் இறந்த பள்ளி ஆசிரியை மமிதா மெஹர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் #JusticeForMamita என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஒடிசாவின் பலாங்கீர் மாவட்டத்தின் துரேகேலா தொகுதியை சேர்ந்தவர் மமிதா மெஹர்இவர், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகயும், அப்பள்ளி பெண்கள் விடுதியின் வார்டனாகவும் பணியாற்றினார். இந்நிலையில், மமிதா கடந்த அக்டோபர் 8-ம் தேதி காணாமல் போக, இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் மமிதாவின் உடல் எரிந்த நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கும் பள்ளியின் மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டது.. இதையடுத்து மமிதாவின் சகோதரர் பாண்டி மெஹர் தனது சகோதரியின் மரணத்தில் பள்ளி நிர்வாக தலைவர் கோபிந்த் சாஹுவுக்கு தொடர்பு இருப்பதாக புகாரளித்தார்.

இதனடிப்படையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வன்ந்த நிலையில், அவர் கடந்த 17-ம் போலீஸ் காவலில் இருந்து தப்பினார். இதையடுத்து, அவர் குறித்த தகவல் தருபவர்களுக்கு 1,00,000 பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர். பின்னர் சாஹூ அவரது சகோதரி வீட்டில் இருப்பதையறிந்து போலீஸ் கைது செய்தனர். மமிதாவின் கொலை வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ட்விட்டரில் #JusticeforMamita என்ற ஹேஸ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கந்தபஞ்சியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சந்தோஷ் சிங் சலுஜாவுடன், சாஹூவுக்கு தொடர்பிருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டன. இதனால், சந்தோஷ் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

0
-லதானந்த் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் – சாப்டர் 2’. ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான  ‘ஆறாவது வனம்’ என்கிற...

நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!

0
-ராகவ் குமார்  நடிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.     மனிஷாவின் தாய்க்கு தன் மகள்...

தாய்லாந்தில் ஹனிமூன்!

0
புதுமண ஜோடிகளான  நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  இப்போது தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இவர்களது ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த  7 ஆண்டுகளாக காதலித்து...

O2  படத்தின் ஒளிப்பதிவில் சாதனை!

0
-லதானந்த் சவாலான கதைக் களத்தை சாமர்த்தியமாகப் படமாக்கியிருக்கிறார்  ’O2’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து, கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்,...

ஆஹா யோகா : காலட்சேபம் கேளுங்க!

0
- ஆர்.மீன லதா, மும்பை. ஐ.நா சபை அறிவிப்பின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப் படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் பிரமாண்டமாக யோகா நிகழ்ச்சிகள்...