ஆடிப்பூரத் திருவிழா; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

ஆடிப்பூரத் திருவிழா; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. 

இதுகுறித்து ஸ்ரீஅண்டாள் கோவில்நிர்வாகம் சார்பாக தெரிவித்ததாவது;

ஶ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடிப்பூர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக தேரோட்டம் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் பங்கேற்க தடைவிதிக்கப் பட்டதால், கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டுக்கான விழாவுக்கு விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து, கடந்த 24-ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலையில் ஸ்ரீ ஆண்டாள்ற்றும் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இன்று காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்கியது.

தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஆண்டாள் , ரங்க மன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். 

-இவ்வாறு அக்கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.

இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com