Popular Front of India வங்கிக் கணக்குகள்;அமலாக்கத்துறை முடக்கியது!

Popular Front of India வங்கிக் கணக்குகள்;அமலாக்கத்துறை முடக்கியது!

நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுகுறித்து  இந்திய அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எஃப்ஐ) ஆகிய நிறுவனங்கள் பண மோசடியில் ஈடுபட்டது கன்டறியப் பட்டது. அதையடுத்து இந் அமைப்புகள்மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இரு அமைப்புகளுக்குச் சொந்தமான 33 வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான 23 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 59,12,051 தொகை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரீஹப் இந்தியா பவுண்டேஷனுக்குச் சொந்தமான 10 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 9,50,030 தொகை முடக்கப்பட்டுள்ளது.

இரு அமைப்புகளுக்கும் சொந்தமான 33 வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தம் ரூ. 68.62 லட்சம் தொகை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com