0,00 INR

No products in the cart.

தபால் நிலையங்களில் இன்றுமுதல் தேசியக் கொடி விற்பனை!

நாட்டில் மொத்தமுள்ள 1 லட்சத்து 60 ஆயிரம்  தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் நேரிலும் மற்றும் ஆன்லைனிலும் இந்திய தேசிய கொடியை விற்பனை செய்யப்பட  உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாட்டில் அனைவரும் தம் வீடுகளில் இந்திய தேசிய கொடியை ஏற்றும்படி பிரதமர் மோடி அறிவித்தார்.அதன்படி கடந்த ஜூலை 20- ம் தேதி இந்திய அரசு புதிய அறிவிப்பாணை வெளியிட்டது.

அதன்படி ஒவ்வொரு தனி நபரும் அவரவர் வீட்டில், வெட்ட வெளியில் நாள் முழுவதும் தேசிய கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு முன்பு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற அனுமதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் தேசிக் கொடிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. அந்தவகையில் 20 இன்சுக்கு 30 இன்ச் அளவுள்ள தேசியக் கொடியின் விலை ரூ. 25-க்கு விற்கப்படும். இதற்கு சிறிய அளவிலான தேசியக் கொடிகள் ரூ. 18 மற்றும் ரூ 9-க்கு விற்பனை செய்யப்படும்.

இதுதவிர மகளிர் சுய உதவிக் குழுக்கள், காதி நிறுவனம், மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகளும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Stay Connected

261,078FansLike
1,920FollowersFollow
11,300SubscribersSubscribe

Other Articles

TNEA பொறியியல் மாணவர் சேர்க்கை; புதிய நடைமுறை அமல்! 

0
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் மாணவர்களின்  கலந்தாய்வு  நான்கு சுற்றுகளில் நடைபெறும் என்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்ய பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலாளா் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.  - இதுகுறித்து...

வங்கிக் கடனுக்கு வட்டி அதிகரிப்பு; பொதுமக்கள் அதிர்ச்சி! 

0
வங்கிகளில் பெறப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் பல்வேறு வகையான தேவைகளுக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்...

தைவான் எல்லையில் பதற்றம்; சீனா தீவிர போர் பயிற்சி! 

0
தைவான் நாட்டு எல்லையை சுற்றி சீனா உக்கிரமாக ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரம்மாண்ட போர் கப்பலான யுஎஸ்எஸ் ரெனால்ட் தைவானுக்கு விரைந்துள்ளது.  சீனாவிடம் இருந்து பிரிந்து...

15-ம் தேதி வரை சுற்றுலா தலங்களில் கட்டணம் இலவசம்! 

0
நாட்டின்  75-ம் ஆண்டு சுதந்திர தின விழா இம்மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த 75வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாடும் வகையில் மத்திய அரசு...

இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம்! 

0
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர்.  34.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனையாகும்....