தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது இனி கட்டாயமல்ல என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:

நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கொரோனா பரவலுக்கு ஏற்ப அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நாட்டில் கொரோனா பதிப்புகள் பெருமளவு குறிந்த நிலையில் மார்ச் 31-ம் தேதியுடன் நாட்டில் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.  அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுகின்றன. இனி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி என்பது கட்டாயமல்ல.

பொது மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம். மேலும் முக கவசம் அணீவது, தனி மனித இடைவெலி கடைபிடிப்பது போன்றவற்றை மக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com