0,00 INR

No products in the cart.

புதுக் கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்: பீகாரில் பரபரப்பு!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், நாளை பீகாரில் புதிதாக கட்சி தொடங்கவுள்ளதாக வெலியான செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு, அதனை அவர் ஏற்க மறுத்தார் இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் தன் டிவிட்ட்ர பக்கத்தில் குறிப்பிட்டதாவது:

காங்கிரஸ் கட்சியில் இணையும் திட்டம் எனக்கு இல்லை. ஆனால் என்னுடைய புதிய  அரசியல் பயணத்தை எனது சொந்த மாநிலமான பீகாரிலிருந்து தொடங்க உள்ளேன். 

-இவ்வாறு நேற்று முன்தினம் (மே 2) தன்  ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர், நாளை தனது புதிய அரசியல் கட்சி குறித்த விவரங்களை தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் சமூக ஆர்வலர்கள், ஆர்டிஐ ஆர்வலர்கள், மற்றும் பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து அவர் பேசியுள்ளார். மேலும், அவர் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளையும் அறியவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..

Stay Connected

261,755FansLike
1,915FollowersFollow
7,230SubscribersSubscribe

Other Articles

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: நித்யானந்தா பரபரப்பு வாக்குமூலம்!

0
இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், சுவாமி நித்தியானந்தா தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தகவல்கள்  பரவிய நிலையில், இதுகுறித்து , நித்யானந்தா சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது: சர்ச்சைக்குப்...

விகரம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல்: நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்! 

0
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று வெளியானநிலையில், அந்த பாடலில் மத்திய அரசை விமரிசித்து சில வரிகள் இடம்பெற்றிருந்தது. கமல்ஹாசன் அந்த பாடலை தானே எழுதி பாடியிருந்தார்....

மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயம்; உத்தரபிரதேச அரசு உத்தரவு!

0
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசின் மதரஸா கல்வி வாரியம் தெரிவித்ததாவது: உத்தரபிரதேச மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன், தேசிய கீதம்...

இலங்கையின் புதிய பிரதமர்: பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

0
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்கே. இப்பதவியை இவர் 6-வது முறையாக ஏற்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட...

16-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது; வங்கக்கடலில் உருவான அசானி புயல் நேற்று ஆந்திரா மாநிலம்...