0,00 INR

No products in the cart.

வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை வென்ற 7 வயது சிறுமி! 

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வரும் நிலையில், அவற்றைப் பார்க்க ஆடியன்ஸாக வந்த அரியலூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஷர்வானிகா, போட்ஸ்வானா நாட்டு கிராண்ட் மாஸ்டருடன் போட்டி தளத்துக்கு வெளியே விளையாடி வென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் மகாபலிபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி இம்மாதம் 10-ம் தேதி வரை நடந்து வருகிறது. இப்போட்டிகளில் 186 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வீரர்கள் பங்குபெற்றுள்ளனர்.

இதில் இந்தியாவை சேர்ந்த 6 அணிகளும்  வெற்றிகளை குவித்து வருகின்றன. இப்போட்டிகளைக் காண பார்வையாளர்கள் பல ஊர்களிலிருந்தும் தினமும் வந்து குவிகின்றனர்.அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தைக் காண அரியலூரை சேர்ந்த ஷர்வானிகா என்ற 7 வயது சிறுமி தன் பெற்றோருடன் வந்திருந்தார் 

அங்கு பார்வையாளர்கள் செஸ் விளையாடுவதற்காக வைக்கப் பட்டிருந்த செஸ் போர்டுகளில் பலர் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே வந்த போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென், தன்னுடன் நட்பு ரீதியாக யாராவது விளையாடத் தயாரா என்று கேட்க, உடனே ஷர்வானிகா தான் விளையாட விரும்புவதாகத் தெரிவிக்க, இருவருக்கும் போட்டி துவங்கியது. 

வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டருடன் உள்ளூர் சிறுமி ஒருவர் விளையாடுகிறார் என்று தெரிந்து, அங்கு கூட்டம் குவியத் துவங்கியது. இறுதியில் குறைந்த மூவ்களில் கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென்னை ஷர்வானிகா வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து அச்சிறுமியை டிங்க்வென் மற்றும் சுற்றியிருந்த மக்கள் அனைவரும் பாராட்டினர் 

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் கூறியதாவது; 

எங்கள் மகள் ஷர்வானிகாவுக்கு சிறு வயதிலிருந்தே செஸ் போட்டியில் ஆர்வம் உண்டு. இப்போது ஆசிய அளவிலான செஸ் போட்டிக்கு இந்தியா சார்பாக அவர் தேர்வாகி உள்ளார். ஆனால் அதற்கேற்ற நிதியுதவி கிடைக்கவில்லை. அரசின் உதவி கிடைத்தால் வெளிநாட்டு போட்டிகளுக்கு பயணம் மேற்கொள்வோம். 

இவ்வாறு சிறுமி ஷர்வானிகாவின் பெற்றோர் தெரிவித்தனர். 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தமிழக பொறியியல் படிப்புகள்; தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப் பட்டது.  -இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்ததாவது:  தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது....

தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி! 

0
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.   –இதுகுறித்து சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது:   கடந்த ஆண்டு ஏற்பட்ட...

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

0
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில...

இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து! 

0
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.  இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் இந்த கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்! 

0
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்று நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.   –இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...