‘டிராக் அழகர்’ செயலி; கள்ளழகரின் வருகையை தெரிந்து கொள்ள புதிய ஆப்!

‘டிராக் அழகர்’ செயலி; கள்ளழகரின் வருகையை தெரிந்து கொள்ள புதிய ஆப்!

மதுரை சித்திரைத் திருவிழா இன்று மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவின்போது, "டிராக் அழகர்" என்ற செல்போன் செயலி மூலம் கள்ளழகர் வருகை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையின் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடர்பாக அனைத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது:

இந்த வருடம் சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வந்து வைகையாற்றில் தீர்த்தவாரி கண்டு மீண்டும் அழகர் மலைக்குச் செல்லும் வரை அவர் எந்த இடத்தில் அழகர் இருக்கிறார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள  "டிராக் அழகர்' என்ற செயலி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் கள்ளழகரின் வருகையை பொதுமக்கள் தெரிந்துகொண்டு, கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசிக்க முடியும்.

-இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com