0,00 INR

No products in the cart.

வங்கிக் கடனுக்கு வட்டி அதிகரிப்பு; பொதுமக்கள் அதிர்ச்சி! 

வங்கிகளில் பெறப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் பல்வேறு வகையான தேவைகளுக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்து வருகிறது.

இந்நிலையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்ததாவது;

தற்போது உலகளாவிய சூழலில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பொருளாதார நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப் படுகிறது. அதாவது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9% ஆக இருந்த நிலையில் அது 5.4% ஆக உயர்ந்துள்ளது. 

இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், பொதுமக்கள் வீடு, கார், தொழில் கடன்களுக்கு வங்கியில் வாங்கிய கடன் தொகைக்கு தனிநபருக்கான வட்டி விகிதமும்  உயரக்கூடும் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர் 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

சினிமாவில் 63-ம் ஆண்டு : கமல்ஹாசன் சாதனை!

0
சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன் தனது  திரைத்துறைப் பயணத்தில் இன்று  63-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இதுகுறித்து கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் தெரிவித்ததாவது: உலக...

வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி கோரிக்கை!

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும், தேசப்பற்று உணர்வை போற்றும் வகையிலும் அனைத்து வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில்...

சென்னையில் உணவுத் திருவிழா: இன்று தொடக்கம்!

0
சென்னை தீவுத் திடலில் தமிழக அரசு நடத்தும் 3 நாள் உணவுத் திருவிழா இன்று தொடங்கியது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழாவில், நிறைவு நாளில்...

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவர் இன்று பதவியேற்பு!

0
நாட்டின் 14-வது புதிய குடியரசுத் துணைத்  தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பொறுப்பேற்கிறார். - இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கைய நாயுடுவின்...

காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

0
காஷ்மீரில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து இந்திய ராணுவம் சார்பில் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ.,தொலைவில்...