தமிழக தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்: இன்று முதல் உற்பத்தியாளர்கள் அதிரடி!

தமிழக தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்: இன்று முதல் உற்பத்தியாளர்கள் அதிரடி!

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவதாக, தமிழக தீப்பட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, குடியாத்தம், காவேரி பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்றுமுதல் மூடப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே உற்பத்தியான தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லபடாது. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும்  லைட்டர்களால் இங்கு உள்நாட்டில் தீப்பெட்டி விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு சீன லைட்டர்களுக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த கோர்க்கையை நிறைவேற்றும் வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூட முடிவெடுத்துள்ளோம்.

-இவ்வாறு தமிழக தீப்பெட்டி உற்பத்தியார்கள் தெரிவித்துள்ளனர். கோரிக்கை வைத்துள்ளனர். இன்றுமுதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் இந்த போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com