0,00 INR

No products in the cart.

என் காதல் கணவரை என் கண் முன்பே கொன்று விட்டார்கள்: இளம் பெண் கதறல்!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த பில்லாபுரம் நாகராஜ் (25). ஐதராபாத்தில் ஒரு கார் ஷோரூமில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்தவர். பட்டியல் இனத்தவரான நாகராஜ், அதே பகுதியைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து, பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்

இந்த சூழலில், நாகராஜ் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சுல்தானாவுடன் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த போது, சுல்தானாவின் சகோதரர் மொபின் அகமது மற்றும் அவரது நண்பர் ஆகியோர் நாகராஜை வெட்டிக் கொலை செய்தனர். கணவரைக் காப்பாற்ற சுல்தானா முயன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் சுல்தானா பேசியதாவது;

என்னை திருமணம் செய்து கொண்டால் அவரது உயிருக்கு என் சகோதரர்களால் ஆபத்து என்று நான் பலமுறை சொல்லியும் ,’’வாழ்ந்தாலும், இறந்தாலும் உன்னோடுதான்..’’ என்று சொல்லி என்னை திருமணம் செய்துகொண்டார். இப்போது நான் பயந்ததை போலவே நடந்துவிட்டது.

அவரை என் கண் முன்னாலேயே துடிக்க துடிக்கக் கொன்றுவிட்டார்கள். அந்நேரத்தில் அச்சம்பவத்தை 100-க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. அப்படி யாராவது உதவ முன்வந்திருந்தால், என் கணவரைக்  காப்பற்றியிருக்கலாம். அவரை கொலை செய்த என் சகோதரர் உள்ளிட்டோருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்.

-இவ்வாறு சொல்லி கதறி அழுதார் சுல்தானா.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பேரறிவாளன் விடுதலை; உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு!

0
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைதண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோர உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இன்று அந்த...

5 பரீட்சை பிட் பேப்பர்கள்; நாமக்கல் ஜெராக்ஸ் கடைகளில் பறிமுதல்! 

0
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ அளவுக்கு பரீட்சை பிட் பேப்பர்கள் கன்டறியப் ப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகம்...

TNPSC – குரூப் 2 தேர்வு; காலை 9 மணிக்கு பின் வந்தால் அனுமதியில்லை!

0
டிஎன்பிஎஸ்சி. குரூப்  2-வுக்கான தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாதம் 21-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி இம்மாதம்...

சமையல் எண்ணெய் அதிரடி உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை அடுத்து சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது: சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு அடுத்தபடியாக சமையல் எண்ணெய் விலை...

சர்வதேச துருக்கி குத்துச்சண்டை போட்டி: வெள்ளி வென்ற நிவேதாவுக்கு உற்சாக வரவேற்பு!

0
துருக்கியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நிவேதா இன்று சென்னை திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. துருக்கியில் இஸ்தான்புல்லில் வாகோ 7-வது சர்வதேச துருக்கி ஓபன் குத்துசண்டை...