சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப் பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிச்சியடைந்துள்ளனர்.

-இதுகுறித்து தெரிவிக்கப் பட்டதாவது:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் .

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக இருந்தது.  பின்னர் மே மாதம் 53 ரூபாய் உயர்த்தப்பட்டு, கேஸ் சிலிண்டர் விலை ரூ. 1,018.50 காசுகளுக்கு ஆக விற்கப்பட்டு வந்தது. ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலை ஏற்றப்படவில்லை.

இந்நிலையில் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளதால், சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com