கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது; தமிழக சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது; தமிழக சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 20 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருப்பூர் மற்றும் ஒரு சில மாவட்டங்களிலும் ஓரிரு புதிய தொற்று கண்டறியப்படுகிறது.

மக்கள் பொது இடங்களில் வருவதற்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப் பட்டாலும் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில்தான் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்கள் அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல்,  கூட்டம் கூடுவதை தவிர்த்தல், காற்று இல்லாத இடங்களை தவிர்த்தல் ஆகியவற்றிக் கடைபிடிக்க வேண்டும்.

உலகில், இப்போதும் 7 முதல் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஒரு நாளில் உறுதி செய்யப்படுகிறது.  இதுகுறித்து நாம் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்வது தொடர வேண்டும். அதே நேரம் மரபணு பரிசோதனைக்கு மாதிரிகள் தொடர்ந்து அனுப்பப்பட வேண்டும்.

-இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com