எல்.ஐ.சி பங்குகள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்க 3 மடங்கு அதிக விண்ணப்பங்கள்! 

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்க 3 மடங்கு அதிக விண்ணப்பங்கள்! 

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், அரசால் அறிவிக்கப் பட்டதைவிட 3 அதிக  விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:.

எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகித பங்குகளை, விற்று கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவெடுத்து அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. மே 2-ம் தேதி முதல் நேற்றுவரை வின்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன். இந்நிலையில், கிட்டத்தட்ட 3 மடங்குக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததுள்ள நிலையிலும், இந்தளவு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன

அடுத்த கட்டமாக, மே 17-ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும். விண்ணப்பங்கள் அதிகமாக குவிந்திருப்பதால், விண்ணப்பதாரரர்களுக்கு அவர்கள் கேட்பதை விட குறைந்த அளவிலேயே எல்ஐசி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் கருதுகின்றனர்

விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில், பங்கு ஒதுக்கீடு விலை, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும்.உச்சப்பட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 945 ரூபாய்க்கு எல்ஐசி பங்குகள் ஐபிஓ மூலம் விற்பனை செய்யப்படும் கருதப்படுகிறது. எல்ஐசியின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 ஆக இருக்கும் எனவும், எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் எனவும் அரசு முடிவு செய்துள்ளது

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com