தமிழகத்தில் வாடகை ஆட்டோ கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ல் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி குழுவும் அமைக்கப்பட்டது.
இக்குழு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஆட்டோவில் பயணிக்கும் முதல் 1.5 கிமீ தொலைவிற்கு கட்டணமாக ரூ.40, கூடுதலான ஒரு கிமீ ரூ.18 உயர்த்தலாம் என குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் தரப்பில் குறைந்தபட்சமாக ரூ.30, கூடுதல் கி.மீ ஒன்றுக்கு ரூ 15 வசூலிக்கலாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு குறித்த இறுதி முடிவை அரசு எடுக்கும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எரி பொருள் விலை நாளுக்கு நாள் ஏறும் நிலையில் ஆட்டோ கட்டணம் வருடா வருடம் அதிகரிக்க வேண்டு்ம். ஆனால் அதே நேரத்தில் ஆட்டோ ஒட்டுநர்கள் பயணிகளைமதிக்க வேண்டும். பெங்களூரில் ஆட்டோ ஒட்டுநர்கள் பயணிகளை மதிக்கும் அளவு தமிழ்நாட்டில் மதிப்பதில்லை. இது மிகவும் வருத்தமாக விஷயம்