பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?! 

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?! 

பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு 2 கோடியே 23 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-இது குறித்து பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிடப் பட்டதாவது:  

பிரதமர் மோடி முதன் முதலில் 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல், ஆண்டுதோறும் தன் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

அதே போல, அனைத்து அமைச்சர்களையும் சொத்து விவரங்களை வெளியிடும்படி கூறியுள்ளார்.  

இதன்படி, பிரதமர் மோடியின் 2021 – 2022 நிதியாண்டுக்கான சொத்துப் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. அதில், மோடியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு 26.13 லட்சம் ரூபாய் உயர்ந்து, 2.23 கோடி ரூபாயாக உள்ளது. இதில் பெரும்பாலானவை வங்கி முதலீடுகள் ஆகும். மற்றபடி பிரதமர் வேறெந்த  பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யவில்லை. அவருக்கு சொந்தமாக வாகனம் ஏதுமில்லை. அதே நேரத்தில், 1.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு மோதிரங்கள் உள்ளன.  

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தை மூன்று பேருடன் சேர்ந்து 2002-ல் மோடி வாங்கியிருந்தார். அதில், 25 சதவீத பங்கின் மதிப்பு 1.1 கோடி ரூபாய். தற்போது அந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.  

– இவ்வாறு பிரதமர்  மோடியின் சொத்து மதிப்பு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மேலும்  மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.கே.சிங், ஹர்தீப் சிங் பூரி, புருஷோத்தம் ரூபலா, கிஷண் ரெட்டி ஆகியோரும் தங்களுடைய சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.  

முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் தன் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தனக்கு 2.54 கோடி ரூபாய் அசையும் சொத்து மற்றும் 2.97 கோடி ரூபாய் அசையா சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com