100 கோடி கொரோனா தடுப்பூசி: இலக்கை எட்டி இந்தியா அபார சாதனை!

100 கோடி கொரோனா தடுப்பூசி: இலக்கை எட்டி இந்தியா அபார சாதனை!

சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவது துவங்கிய நிலையில், 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து சீனாவுக்கு அடுத்தபடியாக 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய 2வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.. இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே சாதனைக்கு காரணம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்குநன்றி. இந்த சாதனையை எட்ட உதவி ஒவ்வொருவருக்கும் நன்றி.

-இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இதையடுத்து #VaccineCentury என்றஹேஷ்டேக்ட்விட்டரில்ட்ரெண்டாகிவருகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com