ரூ 10 லட்சம் அபராதம்: சென்னையில் முகக்கவசம் அணியாதோரிடம் ஒரே நாளில் வசூல்!

ரூ 10 லட்சம் அபராதம்: சென்னையில் முகக்கவசம் அணியாதோரிடம் ஒரே நாளில் வசூல்!
Published on

சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ 10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக செனை மாந்கர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை வருகிற 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுஇடங்களில் மக்கள் கூடும்போது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும் நாட்டில் கொரோனா 3-வது அலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதால், பொது இடங்களில் மக்களை கண்காணிக்க போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் முகக் கவசம் அணியாமல் வந்த 5,040 பேரிடமிருந்து ரூ 10 லட்சத்து 8 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் கடை வீதிகள், மார்க்கெட் பகுதிகள், பஸ், ரெயில் நிலையங்களில் முக கவச சோதனை நடத்தப்படும். அப்படி முகக்கவசம் அணியாமல் வருபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com