தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி: ஏ.ஆர். ரகுமான் அதிரடி!

தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி: ஏ.ஆர். ரகுமான் அதிரடி!

இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்தான் என்றும், தமிழ் படங்கள் மூலம் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று ஏ.ஆர். ரகுமான் பேசியதாவது:

இந்தியாவிற்கு இணைப்பு மொழிப்பு தமிழ்தான். நான் 7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றிருந்தபோது என்னிடம் ஒரு சீனர் வட இந்தியர்கள் சிவந்த நிறமாக இருப்பதாகவும், அவர்களின் படங்களை விரும்பி பார்ப்பதாகவும் கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் தென்னிந்திய படங்களை பார்த்திருப்பாரா என் யோசித்தேன்.

தென்னிந்திய படங்களில் கறுப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த, வலிமையான கதாபாத்திரங்களைக் கொடுங்கள். நமது இந்த நிறத்தைக் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி. தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

-இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார். இந்நிலையில் நேற்று அவர் தன் டிவிட்டர் பதிவில், 'ழகரம் ஏந்திய தமிழணங்கு' என்ற பெயரில் ஒரு பெண்ணின் படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அதில் பாரதிதாசனின் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்' என்ற பாடல் வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com