ஜேஎன்யு-வில் வெடித்த வன்முறை: 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்!

ஜேஎன்யு-வில் வெடித்த வன்முறை: 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்!

டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு வெடித்த வன்முறையில், பல மாணவர்கள் படு காயமடைந்தனர்.

நேற்று ஶ்ரீராமநவமியை முன்னிட்டு ஜேஎன்யூ வளாகத்தில் காவேரி விடுதி மெஸ் அருகில் ஏபிவிபி அமைப்பினர் யாகம் நடத்தினர். அச்சமயம் மெஸ்ஸில் அசைவ உணவு சமைப்பதற்காக அவ்வழியே இறைச்சிகளை கொண்டு மெஸ் ஆட்கள் சென்ற்போது, அதை தடுத்து நிறுத்தியதால் ஏபிவிபி அமைப்பினருக்கும் இடதுசாரி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வன்முறையில் முடிந்த்தாகக் கூறப்படுகிறது. இதில் 50- க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் (JNUSU) கவுன்சிலர் அனகா பிரதீப் கூறியதாவது:

ஜேஏன்யூ-வில் எல்லா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அனைத்து விடுதிகளிலும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் சமைக்கப்படுகின்றன. இது வழக்கமான நடைமுறை தான். ஏபிவிபி மாணவர்கள் காவேரி விடுதி அருகே ஏதோ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வியாபாரி கோழி விநியோகம் செய்ய வந்தபோது, அவரை தடுத்து நிறுத்தினர். ஹோமம் நடத்தப்படுவதாகவும், அசைவ உணவை சமைக்க முடியாது என கூறித் தடுத்தனர்.

இதையடுத்து இடதுசாரி அமைப்பினர் கைகலப்பில் ஈடுபட தகராறு வெடித்தது. இருதரப்பினரும் பூந்தொட்டி, செங்கல், கற்கள் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். இதில் மற்ற மானவர்களும் படுகாயமுற்றனர்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது;

ஜேஏன்யூ-வில் சம்பவம் நடந்த உடனே காவல்துறை அங்கு விரைந்து சென்ற்று நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இரவு 9:45 மணியளவில் நிலைமை சீரானது. இரு மாணவர் அமைப்பினரும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் புகார்களின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com