0,00 INR

No products in the cart.

கேரளாவில் அதிகரிக்கும் தக்காளி காய்ச்சல்; அண்டை மாநிலங்கள் பதற்றம்!

கேரளாவில் சமீபத்தில் தக்காளி காய்ச்சல்எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவரின் உடலில் தக்காளி போன்று சிவப்பு நிற கொப்புளங்கள் ஏற்படுவதால் இதுதக்காளி காய்ச்சல்என அழைக்கப்படுகிறது. குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடிய இந்நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில்நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வவ்வாளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த அரிய வகை வரைஸ் காய்ச்சல், கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவை ஆட்டிப் படைத்தது. இந்நிலையில் மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:

கேரளாவில் நிபா அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கும் தெரிவித்துள்ளோம்.

-இவ்வாறு  கேரள சுகாதாரத்துறை சார்பில்  தெரிவித்துள்ளது. 

கேரளாவில் தக்காளி காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் பரவியுள்ளதால், அண்டை மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இவை தாக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பேரறிவாளன் விடுதலை: கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸார் போராட்டம்!

0
நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதர்கு கண்டனம் தெரிவித்து தமிழக...

ஆன்லைன் கேம்ஸுக்கான ஜிஎஸ்டி வரி; அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!

0
மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் குழுவின்  பரிந்துரையில் தெரிவிக்கப்...

சிதம்பரம் கோயில் கனகசபை: பக்தர்கள் ஏறி வழிபட அரசு அனுமதி! 

0
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு முக்கிய பிரமுகர்கள் தவிர...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் இன்று தேர்வு!

0
நாடாளுமன்றத்தில் தமிழகம் சார்பாக காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்கு போட்டியிட அதிமுக-வுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை...

1 கிலோ தக்காளி ரூ.100: சென்னை கோயம்பேடு நிலவரம்!

0
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது; இம்மாதத் தொடக்கத்திலிருந்தே தக்காளி விலை...