15-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால் 2% அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

15-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால்  2% அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால் 2% அபராதத்துடன் கூடிய சொத்துவரி வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்ததாவது:

சென்னையில் சொத்து வரிதாரர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த தவறினால் 2% அபராதத் தொகையுடன் சொத்துவரி வசூலிக்கப்படும். மறுசீராய்வுக்குப் பிறகான சொத்து வரி கட்டணம் குறித்து மாநகராட்சி மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாக செலுத்தலாம். அல்லது மாநகராட்சி வரி வசூலிப்பாளா்கள், உரிம ஆய்வாளா்கள் மூலமும் வரி செலுத்தலாம்.

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் சீராய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சொத்து வரி தொடா்பாக மன்றத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். எனவே, 2022-23-ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கெனவே மாநகராட்சிக்குச் செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே ஏப்ரல் 15-க்குள் செலுத்தலாம். தவறுவோருக்கு 2 சதவீதம் அபராதத் தொகை விதிக்கப்படும்.

-இவ்வாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிகத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com