0,00 INR

No products in the cart.

பெண் பத்திரிகையாளர் படுகொலை: பாலஸ்தீனத்தில் பரபரப்பு!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடக்கும் வன்முறைப் போரில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51) கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாலஸ்தீனத்தில் மேற்குக்கரை பகுதி, ஜெருசலேம் நகரத்தை சொந்தம் கொண்டாடி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51) கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார். 

இதுகுறித்து கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்ததாவது:

அல் ஜசீரா டி.வி சார்பாக எங்கள் பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே பாலஸ்தீன அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்க சென்றபோது, இஸ்ரேல் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மற்றோரு பத்திரிகையாள்ரும் பலத்த காயமடைந்தார்.

-இவ்வாறு அல் ஜசிரா தகவல் தெரிவித்துள்ளது

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

0
பிரதமர் மோடி நாளை (மே 26) தமிழகம் வருகை தரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  -இதுகுறித்து பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: மதுரை -...

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது: வங்கக்கடலில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்  வெப்பசலனம்...

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!

0
செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. செஸ்ஸபிள் மாஸ்டர் தொடருக்கான ஆன்லைன் செஸ் போட்டிகள் 9 தொடர்களாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ...

புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு: ஆந்திராவில் கலவரம்!

0
ஆந்திராவில் புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் கலவரம் ஏற்பட்டதால், அங்கு ஊரடங்கு தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் இருந்த  13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக...

சாதி வன்முறையைத் தூண்டுகிறார்; திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சி புகார்!

0
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக அவர்மீது ஆவடி காவல் ஆணையாளரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். -இதுகுறித்து  புரட்சி பாரதம் கட்சியினர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்...