இந்தியா vs இங்கிலாந்து: இன்று ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டி! 

இந்தியா vs இங்கிலாந்து: இன்று ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டி! 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து சென்று தொடர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

-இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் டெஸ்ட் போட்டித் தொடர் டிராவில் முடிவடைந்தது. மேலும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com