ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Published on

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (teacher eligibility test 2022) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (teacher eligibility test 2022) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவேறறிவிக்கப் பட்டிருந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (எப்ரல் 13) கடைசி நாள் ஆகும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

-இவ்வாறு தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் சர்வர் கோளாறு காரணமாக விண்ணப்பத்துக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com