0,00 INR

No products in the cart.

நானும் எம்.ஜி.ஆர் ரசிகன் தான்; முதல்வர் மு.க. ஸ்டாலின்!

வேலூர் செண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் என்பவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பாரட்டுக் கடிதம் எழுதியதற்கு, அவரை போனில் அழைத்து முதல்வர் நன்றி தெரிவித்த ஆடியோ வைரலாகி வருகிறது

முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து விட்டு சென்னை திரும்பினார்.  இந்நிலையில் வேலூர் செண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

நீங்கள் வேலூர் வந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம். எங்கள் தொழில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் உங்களின் உத்தரவின் பேரில்தான் நடந்திருக்கும் என்பதை அறிவேன். மேலும் எங்கள் மாவட்டத்துக்கு  பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதற்கு  நன்றி. உங்களுக்கு எம்ஜிஆரின் தீவிர ரசிகனான என்னுடைய வாழ்த்துகள்.

-இவ்வாறு அந்த ஆட்டோ டிரைவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அக்கடிதத்துடன் கலைஞரும் எம்ஜிஆரும் ஒன்றாக உள்ள புகைப்படம் மற்றும் எம்ஜிஆருடன்  ஸ்டாலின் உள்ள புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்பி இருந்தார். இதையடுத்து ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வத்தை போனில் அழைத்து ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 

அந்த போன் உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

‘’நான் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். உங்க கடிதத்தை படிச்சேன். நீங்க புரட்சிதலைவர் ரசிகன் சொல்லி இருக்கீங்க. நானும் எம்ஜிஆர் ரசிகன் தான். எனக்கு பாராட்டு சொல்லி இருக்கீங்க. அந்த பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கத்தான் போன்போட்டேன்’’ 

-இவ்வாறு  முதல்வர் பேச, ஆச்சரியத்தில் திகைத்த ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் ’’ரொம்ப நன்றிங்கண்ணா. நீங்களே லைன்ல வந்தது ரொம்ப சந்தோஷம். உங்க கைக்கு லெட்டர் கிடைக்காதுன்னு நினைச்சுட்டேன்’’ என்று சொல்ல,

’’அதெப்படி லெட்டர் கிடைக்காம போகும்?. கரெக்டா கைக்கு வந்து சேர்ந்துடுச்சி’’ என்ற முதல்வர், பன்னீர்செல்வத்தின் தொழில் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார். 

முதல்வரின் இந்த ஆடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தென்காசியில் 144 தடையுத்தரவு!

0
மாவீரன் பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தவர் மாவீரன் ஒண்டி வீரன். இன்று ஒண்டி வீரனின் 251வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று அவரின் நினைவு...

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: ஆய்வாளர் சஸ்பெண்ட்! 

0
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  -இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது:  அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள்...

படகில் ஏகே-47 துப்பாக்கிகள்; மகாராஷ்டிராவில் கைப்பற்றல்! 

0
மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் ஒரு படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  -இதுகுறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது: மகாரஷ்டிராவில்...

 இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: நாடெங்கும் கொண்டாட்டம்! 

0
ஶ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளாக இன்று  கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில்...

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு! 

0
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரயிலிலிருந்து பெண் கார்டு தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  -இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தெற்கு ரயில்வே பொது சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது;  கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச்...