0,00 INR

No products in the cart.

மனித உரிமை மீறல்: நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்குப் பதிவு!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது தேசிய மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9-ம் தேதியன்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கோலாகலமாக திருமணம் நடந்தது. ரிசார்ட்டையடுத்த கடற்கரையில் செட் போட்டு நடந்த இத்திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்ட நிலையில், திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். அச்சமயம் மகாபலிபுரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் கடற்கரைக்கே செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கடற்கரை பொது இடம் என்பதால் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடந்த ஜுன் 9-ம் தேதி அன்று ஏன் பொதுமக்களை அனுமதிக்கவில்லை. 

இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

செஸ் ஒலிம்பியாட்: வென்ற 2 இந்திய அணிக்கு தலா ரூ 1 கோடி பரிசு!

0
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் இரண்டு அணிகளுக்கு, தமிழக அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   -இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

அக்னிபாத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு : வேலூரில் முகாம்! 

0
இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தில் திருமணமாகாத பெண் ராணுவ வீராங்கனைகளை சேர்ப்பதற்கான ராணுவ பயிற்சி முகாம் வேலூரிலுள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெறுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.   - இது குறித்து இந்திய...

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! 

0
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  புதுச்சேரி சட்டசபையில்  முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்...

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?! 

0
பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு 2 கோடியே 23 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  -இது குறித்து பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிடப் பட்டதாவது:   பிரதமர் மோடி முதன் முதலில்...

டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் ஓய்வு அறிவிப்பு! 

0
கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் 23 முறை வென்ற நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.  சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் செரீனா வில்லியம்ஸ். 1999-ம் ஆண்டு அமெரிக்க...