150 நாட்கள் பரோல் முடிந்து சிறை திரும்பிய பேரறிவாளன்!

150 நாட்கள் பரோல் முடிந்து சிறை திரும்பிய பேரறிவாளன்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக அரசு குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் ராஜீவகாந்தி கொலைவழக்கில் சிக்கி சிறையிலிருக்கும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த மே மாதம் 28ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் 4 முறை பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பேரறிவாளனுக்கு இன்றுடன் பரோல் காலம் முடிவடைவதால் ஜோலார்பேட்டையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 150 நாட்கள் பரோலுக்கு பிறகு பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com